கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. வெற்றியை கொண்டாடும் விதமாக 15-05-2023 இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான நாங்குநேரி ரூபி ஆர். மனோகரன் எம் எல் ஏ தலைமையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நாங்குநேரி ஒன்றியம் நாங்குநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பட்டாசு வெடித்து, மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.