தென்காசியில் முதல்வர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டிய நாடார் பேரமைப்பு..!
பனை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவர் தமிழக முதல்வர் என நாடார் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சௌந்திரபாண்டியன் புகழாரம் சூட்டியுள்ளார். தென்காசி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள கலிதீர்த்தான் பட்டியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் பனைத்தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத்…
நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 47 நகை கொள்ளை: 2 பேர் கைது
நாகர்கோவிலில் டாக்டர் வீட்டில் 47 பவுன் நகை கொள்ளையடித்த வேலைகாரபெண் மற்றும் டிரைவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் பார்வதிபுரம் சானல்கரையை சேர்ந்தவர் ஆபிரகாம்ஜோயல் ஜேம்ஸ்.இவர் நாகர்கோவில் பால்பண்ணை அருகில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த செப்டம்பர்…
தென்காசியில் டாக்டர் அம்பேத்கார் நினைவுநாள் அனுசரிப்பு..!
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் நகர செயலாளர் சாதிர் தலைமையில் அண்ணல்…
நகர்ப்புற தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச் .ராஜா காரைக்குடியில் பேட்டி..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க மூத்த தலைவர் எச் ராஜா மழைக்காக ஊராட்சி நகர்ப்புற தேர்தல் தள்ளிப் போனாலும் நிவாரணங்கள் வழங்கி முடித்த பின்பு விரைவில் நடத்தப்பட வேண்டும் என செய்தியாளர்களை சந்தித்து பேசினார். உள்ளாட்சி நகர்புற தேர்தல் தள்ளிப்போனால் மத்திய…
இளம்பெண்ணிடம் பாலியல்தொல்லை செய்த மருத்துவர் சஸ்பென்ட்.!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிற்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில் சஸ்பெண்ட் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அன்று 26…
ஆண்டிப்பட்டியில் அரசு பள்ளி வளாகத்திற்குள் குளம் போல தேங்கிய மழைநீர் பள்ளிக்கு விடுமுறை அளித்த ஆசிரியர்கள்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சக்கம்பட்டியை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை…
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.180க்கு விற்ற முருங்கைக்காய்..!
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.180-க்கு விற்பனையாகிறது. பீன்ஸ், அவரைக்காய், கத்தரிக்காய் மற்றும் வெண்டைக்காய்களின் விலை 100 ரூபாயை நெருங்குகிறது. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கனமழை…
குமரியில் பச்சைநிறமாக மாறிய கடல்நீர்..! அச்சத்தில் மக்கள்..!
கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் அருகே திடீரென கடல்நீர் பச்சை நிறத்தில் மாறி, அரிய வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாட்டில் காயா வேம்பு பதி எனும் அய்யா பதி…
மாரனேரியில் மண்வெட்டியை கையிலெடுத்த வருவாய் ஆய்வாளர்.., கிராம பொதுமக்கள் பாராட்டு..!
விருதுநகர் மாவட்டம், மாரனேரி கிராமம் சுப்பிரமணியபுரம் ஊரணி கன மழையால் நிறைந்தது. மழைநீர் அருந்ததியர் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டதால், சிவகாசி வருவாய் வட்டாட்சியரின் உத்தரவுப்படி, தண்ணீர் வெளியேறும் கால்வாயில் உள்ள அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பணியை…
ஆண்டிப்பட்டி பகுதிகளில் நெல் சாகுபடி பணி தீவிரம் தொடர் மழை எதிரொலி!..
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர், அம்மச்சியாபுரம், அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களாகும். இந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. மூன்று போகத்தில் ஒரு போகத்தில் ஒரு போகம்…








