• Fri. Apr 19th, 2024

தேசிய சர்க்கரை ஆலையை திறக்க அலங்காநல்லூர் கரும்பு விவசாயிகள் கோரிக்கை!..

Byகுமார்

Oct 12, 2021

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த வருடம் அரவையை துவங்கிட கோரி, மாநில அரசை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் 2021-2022 தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 2021 2022 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு சுமார் 1860ஏக்கர் கரும்பு ஆலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் 60 ஆயிரம் டன் கரும்பு ஆலை பகுதியிலேயே உள்ளது. பதிவு செய்யப்படாத கரும்பு சுமார் 15 ஆயிரம் டன் வரை உள்ளது.

ஆலையில் அரவை துவங்கும்போது இந்த பதிவு செய்யப்படாத கரும்பை தருவதாக விவசாயிகள் உறுதி அளித்துள்ளனர். அதேபோல பக்கத்து மாவட்ட வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை கடன் வசூல் தேசிய தீர்ப்பாயத்திற்கு சென்று விட்ட காரணத்தினால் 2021-2022 பதிவு செய்யப்பட்ட கரும்பு சுமார் 50 ஆயிரம் டன் தேசிய சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2010 மாநில அரசு உப மின் நிலையம் துவக்க 110 கோடி ஒதுக்கீடு செய்து வேலை நிறைவடையாமல் உள்ளது, இந்த மின் நிலையத்தை துவக்க கோரியும் ஆலய இயக்க அரவை செய்தவுடன் கரும்பு விவசாயிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால் மராமத்து வேலை பார்க்க கரும்பு வெட்டும் கூலி அட்வான்ஸ் கொடுக்க ஆலைக்கு வழிகளை வழிவகை கடனாக 10 கோடி கொடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி கூறியதாவது, கடந்த ஆண்டு தேர்தலின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்தில் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அலங்காநல்லூர் கரும்பு ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் முதல்வர் அவர்கள் இந்த பகுதி கரும்பு விவசாயிகளின் நிலைமையை புரிந்து உடனடியாக ஆலையை திறக்கவும் மராமத்து வேலை கரும்பு வெட்டும் கூலி அட்வான்ஸ் கொடுக்க வழிவகை கடனாக 10 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் கரும்பு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் கரும்பு விவசாயிகளின் நிலைமைகளை மதுரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்திருக்கிறோம். அவரும் தமிழக முதல்வரை சந்தித்து ஆலையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி இருக்கிறார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *