ஏழைகளின் ஊட்டி ஏற்காடு. கொரோனா பரவல் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சேலத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, மண்சரிவு சீர் செய்யும் பணிகளை பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஏற்காடு செல்ல முடியாமல் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்த மண்சரிவை சரி செய்ய இரண்டு நாட்கள் ஆகலாம் என கருதப்படுகிறது.