• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 2 கிலோ கஞ்சா துப்பாக்கி பறிமுதல் ஒருவர் கைது..,

ByPuthar Pandian P

Jul 18, 2026

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே கிழக்குத் தோட்டத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக் மேற்பார்வையில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், சப் இன்ஸ்பெக்டர்கள் காதர் மைதீன், ராம்செட் மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனர், அப்போது சோதனையின் போது கிழக்கு தோட்டத்தில் வீட்டில் வசிக்கும் மோசஸ் மகன் செல்வராஜ் என்பவர் விசாரனை செய்தனர். அப்போது செல்வராஜ் என்பவர் வீட்டில் முதல் கட்டமாக ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் அல்லது சட்டத்துக்கு விரோத பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்வதற்காக திண்டுக்கல் இருந்து வரவழைக்கப்பட்ட வேணி என்ற மோப்பநாய் உதவியுடன் அவர் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது வீட்டின் மற்றொரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 1 கிலோ கஞ்சாவும் ஒரு நாட்டுத் துப்பாக்கியும் 100 கிராம் துப்பாக்கி வெடி மருந்தும், பட்டா கத்தி (நீண்ட வாள்) கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது

அதன் பின்னர் செல்வராஜ் என்பவரை கைது செய்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அம்மைய நாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வருகை தந்தார், கைது செய்யப்பட்ட செல்வராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினார், மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ கஞ்சா நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி மருந்து, பட்டாகத்தி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அம்மையநாயக்கனூர்போலீசார் செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைகள் அடைத்தனர். இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது