அதிக எண்ணிக்கையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று கூறி பாஜக சார்பில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜகவை சேர்ந்த புறநகர் மாவட்டச் செயலாளர் சுசீந்திரன் தலைமையில் பாஜகவினர் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரியும் விவசாயிகளுக்கு நெல்லுக்கு உரிய விலை கிடைக்க கூறியும் கனிம வளங்களை அரசுக்கு எதிராக சட்டவிரோதமாக திருடுவதை கண்டித்தும் இன்று பாஜக சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து புறநகர் மாவட்ட செயலாளர் கூறும்போது..,
முல்லை பெரியாறு அணை பாசன விவசாயத்திற்காற முதல் போகம் அறுவடை ஆகிவிட்டது மதுரையில் 58 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதற்கு அரசு ஆணையிட்டது ஆனால் தற்போது இரண்டு நிலையங்கள் மட்டுமே செயல்படுகிறது இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்கள் பருவமழை காரணமாக 50 சதவீதம் நிலத்திலே வீணாகிவிடுகிறது மீதமுள்ள 50மூ நெல்களை அவர்கள் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் போதிய நெல் எடை இயந்திரம் இல்லை என்று எடை போடும் லோடுமேன் வசதி இல்லை என்றும் சாக்கு வசதிகள் இல்லை என்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை இந்த நிர்வாகம் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இரண்டு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்களை கொண்டு சென்றால் பதமாக உள்ளது மேலும் அரசு நிர்ணயித்த விலைக்கு தான் எடுக்க முடியும் என்று அதனை திருப்பி அனுப்பி விடுகின்றன அதனை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் பாதி விலையில் கூட விற்கமுடியாமல் முல்லைப் பெரியாறு அணை விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் சட்டவிரோதமாக 1.38.5 ஹெக்டேர் பரப்பளவில் கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுகிறது ஆகவே தமிழக அரசை ஏமாற்றி கனிமவளத்துறைகளை மீறி சட்டவிரோதமாக அளவுகடந்த கிராவல் மண் அள்ளி விற்பனை செய்வது அங்கே நடந்து கொண்டிருக்கிறது இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் தான் இந்த நாட்டின் மூலதாரமாக இருக்கும் என்பதை இந்த அரசு கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறோம்.