சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் உள்ள ட்ரூபா முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசுதன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு முதியோர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி, மதிய உணவினை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தாவது..,
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுள் அறிவிக்கப்பட்டு வருகின்றது, தற்போது கிடைத்துள்ள தகவலின் படி 80 சதவீதத்திற்கு மேல் திமுக வெற்றி பெற்றுள்ளது. என்றாலும் நாங்கள் 100 சதவீத வெற்றியை எதிர்நோக்கி காத்ததிருக்கின்றோம் என்றார்.
இதற்கு திமுக தலைமையிலான கூட்டாணி நல்ல வேட்பாளர்களை நிறுத்தியால் மகத்தான வெற்றி பெற்றதுள்ளதாகவும், நகர்புற தேர்தலை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவோம் என்று உறுதியளித்த அமைச்சர் கே ஆர். பெரியகருப்பன், 5 ஆண்டு கால ஆட்சியில் 505க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.