• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

கவிஞர் மேகலைமணியன்

  • Home
  • கவிதை: பேரழகா!

கவிதை: பேரழகா!

பேரழகா.., என் விழிகள் தேடும் ஓவியமாகஉன்னை வரைந்து கொள்கிறேன் நானடா கைகள் தொடும் ஸ்பரிசமாகஉன்னை நான் உணர்ந்து கொள்கிறேன் அகண்ட இப்பூமியினில்என் கரம் பற்றும்காவியனே என் கண்களுக்கு எப்போதுபுலப்படுவாய் என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., சொல்லிவிடேன் சொல்லிவிடேன்துடிக்கிறது என் சிந்தை! மலர்களோடு பேசி மந்தகாசபுன்னகை பூக்கிறாய்! உனது மனதின் பாதையைஒரு முறை கேட்டுப் பாரேன்கரடு முரடாகக் கிடந்ததைநான் நடந்து நடந்துசெப்பனிட்டதை அறிவாய்! மெளனிக்காதேமரித்துப் போவேன் நான் ஒரு முறை உன் நேசவார்த்தையை உயிர்ப்பித்து விடேன்நீ தான்…

கவிதை: பேரழகா!

பேரழகா.., இந்த நடுநிசி இரவினில் இந்த நிலவில்நீயும் நானும் முத்தமிட்டுக் கொள்வோம்பேரழகா…. எச்சில் முத்தத்தால்காதல் எனும் உணவுசமைத்து உண்போம்நாமிருவரும்! முத்தத்தின் ஈரம்கார்காலத்தின் முதல் மழையாகும்என் பேரழகா… கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகன்!

பேரழகன்.., அவன் ஒருவன் தான் என்னுள் ஓராயிரம் கவிதைகளை கண்டெடுத்தவன் என் இதய சிப்பியில் முத்தானவன் என் மொத்தமும் ஆனவன் அவனே என் பேரழகன் கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., வாழ்க்கை எங்கோ வழுக்கி செல்கிறது… நேசமலர்களை மாலையாக கோர்த்து கொண்டே… கவிதைப் பேரழகனே உன் விழி வீச்சில் மயங்கியே நடை பயில்கிறேன்… ஐம்பதிலும் புதுப்பிக்கிறோமோபுத்தம் புது நேசமாய்… பேருவுகை கொள்கிறேன் பெரும் நேசமாய் என் பேரழகா! கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகனே..!

பேரழகனே.., பேசுவதற்கு தான் நானிருக்கின்றேனே… கேட்பதற்கு மட்டும்நீ அவ்வப்போதுவந்து போ… உன் மௌன மொழி கொண்டு நான் கவிதை சமைக்கிறேன்… என் பேரழகனே..! கவிஞர் மேகலைமணியன்

கவிதை: பேரழகன்!

பேரழகன்.., உனது ஞாபகங்கள்எனக்கிட்டிருக்கும் முடிச்சுகளைஎதனாலும்அவிழ்த்து விட முடிவதில்லை.. தொங்கல் தென்படாதஒரு தொலைதூரப் பாலைவனமாய்நீண்டு கிடக்கின்றன எனது இரவுகள்.. நீ கனவினில் இட்டுச் சென்றமுத்தங்களின்தடயங்கள் ஏதும்கிடைக்கின்றனவா என்றுரகசியமாய்உளவு பார்த்துத் திரிகின்றனஎனது விரல்கள்… நீயும் நானும் பேசி சிரித்தபொழுதுகளின் சாயம்வெளுத்துப் போகாமல்அப்படியே புன்னகைக்கின்றன.. நீ…

கவிதை: பேரழகனே..!

பேரழகனே.., நீ இல்லாமல்நான் கடந்து போகும்ஒவ்வொரு மணித்துளியும்பாறையென கனத்துப்போகிறது..‌. உந்தன் குரல் கேட்காதுஎன் கவிதை நந்தவனத்துசொற்பூக்களும் சொற்பமாய்விடுமுறை கேட்டு விடைபெறுகிறது… வரிகளில் வண்ணத்தை பூசிடும்வண்ணத்துப்பூச்சியும்வழிமாறி பறக்கிறதுவலிக்கும் மனதோடு…. வெள்ளையடித்துகாத்திருந்த வெற்றுத் தாளும்என்ன எழுதிவிடப் போகிறாய்?என ஏளனத்தோடு கேட்கிறது…. என் பேரழகனே.., கவிஞர்…

கவிதை: பேரழகனே!

பேரழகனே.., நாணிச்சிவந்த விடியற்காலைஉன் நேசத்தின் சாயல்… உன் எண்ணங்களில் வழிந்தோடும் மௌனப் பூட்டில்நேசப்பூக்கள் இதழ் விரிக்கும் சிநேகமாக… நிலவொளியின் குளிர்ச்சியெனஉற்சாக ஊற்று உன் சுவாசக்காற்று… அடங்கிடாத நேசப்பிரியத்தின்ஏகாந்தப்பெருவெளி நீயடா பேரழகா… நேசப் பெருவெளியில்நம் நியாபகங்களும் பேசிடுதே என் பேரழகா… என்றும் நீயெனவே…

கவிதை: பேரழகா!

பேரழகா.., நானில்லாமல் நீ தவித்திருந்த வேளைகளில்…….! நானுமிங்கு பலநூறு முறை உனை நினைத்து உதிரத்தை கண்ணீருடன் சேர்ந்து சிந்தியிருப்பேன்…….! உனதன்பு பனிச்சாரலாக எம்மீது வீழ்ந்திடா போதும்….!!! என் மொத்த சொர்க்கமும் நீ என்பேன்……! ஓராயிரம் முறை உன் விழிகளுக்குள் தொலைந்த எனைத்…