பேரழகா..,
நானில்லாமல் நீ தவித்திருந்த வேளைகளில்…….!
நானுமிங்கு பலநூறு முறை உனை நினைத்து உதிரத்தை கண்ணீருடன் சேர்ந்து சிந்தியிருப்பேன்…….!
உனதன்பு பனிச்சாரலாக எம்மீது வீழ்ந்திடா போதும்….!!!
என் மொத்த சொர்க்கமும் நீ என்பேன்……!
ஓராயிரம் முறை உன் விழிகளுக்குள் தொலைந்த எனைத் தேடி களைத்துவிட்டேன்…….!
உனைக் கண்ட நாளிலிருந்து இன்று வரை தேடலின் தவிப்பும் தாக்கமும் குறையவில்லை…..!!!
உன் விழிகளுக்குள்ளே என்றென்றும் சிறைப்பட வேண்டி……!
உன்னிதழ் பதிப்பாய் என்றும் என் இமைகளுக்குள் என்றால்……!!
அட கோடி முறை சிறையில்
அடைப்பட காத்திருப்பேன்…..!!!
பலமுறை கேட்ட பாடலும் இன்று……!
நீ எனக்காக பாடிய போது தான் அப்பாடலின் உள்ளர்த்தத்தை நானும் உணர்ந்தேன்……!!!
என்னுயிரை உன்னுள் புதைத்து……!
இதுவரை காணாத கானகம் கண்டேன்…..!
இதுவரை காணாமல் சென்ற நாளும் எந்நாட்கள் மொத்தமும்……!!!
விடியும் வரை கண்ட கனா…..!
நிஜத்தில் நினைவின் எண்ணங்களின் ஊடாக உனையே நான் கண்டுகொண்டேன்……!!!
நான் கேட்டால் தருவாயா….?
உன்னை தினம் என்னில் மூழ்க……!
வலிகள் இல்லா செல்ல இம்சைகள் நாட்கள்தோறும்…….!!!
குளிர்காற்று வான் மேகந்தனை தீண்டிடும் முன்னே…..!
மண்ணை சில மழைத்துளி வந்து சேரும்….!
அதுபோல்…….
அருகில் வருமுன்னே என்மனதை தழுவுகின்றாய்……!!!
உண்மையான உனதன்பில் என்னுயிரும் கலந்திட சொல்லி……!
என் இரத்தநாளங்கள் அத்தனையும் கட்டளையிடுகின்றதே…..!!!
என்னை வதைத்து சென்ற பல
காயங்கள் இருந்து இருப்பின்…….?
இதுவரை…..
எங்கு செல்லும் என்று தெரியவில்லை……!!!
உன் அரவணைப்பால் என்தேகம் முழுக்க
அனல் கனல் என சுட்டெரிக்கும்……!!!
உன் கள்ள பார்வை சிரிப்புதனில்…….!
என்முகம் வெட்கத்தில் உன் மார்ப்புக்குள்
ஓடி ஒளிந்துகொள்ளும்…..!!!
சத்தமின்றி ஒரு முத்த போர்க்களத்தில்…..!
முன்பகையின்றி எனை மொத்தத்தில் மூச்சடைத்தாய்…….!!!
வஞ்சமின்றி மறுப்பில்லாமல் உன் முச்சுக்குள் நானும் நுழைந்திடுவேன்……!!!

கவிஞர் மேகலைமணியன்






