• Thu. Mar 27th, 2025

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

நாணிச்சிவந்த விடியற்காலை
உன் நேசத்தின் சாயல்…

உன் எண்ணங்களில் வழிந்தோடும் மௌனப் பூட்டில்
நேசப்பூக்கள் இதழ் விரிக்கும் சிநேகமாக…

நிலவொளியின் குளிர்ச்சியென
உற்சாக ஊற்று உன் சுவாசக்காற்று…

அடங்கிடாத நேசப்பிரியத்தின்
ஏகாந்தப்பெருவெளி நீயடா பேரழகா…

நேசப் பெருவெளியில்
நம் நியாபகங்களும் பேசிடுதே என் பேரழகா…

என்றும் நீயெனவே நான்..!

கவிஞர் மேகலைமணியன்