• Fri. Jan 24th, 2025

பேரழகா..,

என் விழிகள் தேடும் ஓவியமாக
உன்னை வரைந்து கொள்கிறேன் நானடா

கைகள் தொடும் ஸ்பரிசமாக
உன்னை நான் உணர்ந்து கொள்கிறேன்

அகண்ட இப்பூமியினில்
என் கரம் பற்றும்
காவியனே

என் கண்களுக்கு எப்போது
புலப்படுவாய் என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்