• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை..,

ByP.Thangapandi

Feb 3, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கதேவன்பட்டியில் சுமார் 46 லட்சம் மதிப்பீட்டில் நுகர் பொருள் வாணிப கழகத்தின் அரசு நேரடி கொள்முதல் நிலையம் கட்டிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது .,

இந்நிலையில் வாலாந்தூர், சொக்கத் தேவன்பட்டி, சங்கம்பட்டி, மணல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது.,

மாவட்ட நிர்வாகம் செல்லம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 30 க்கும் மேற்பட்ட தனியார் நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுமதி வழங்கி மேல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.,

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சொக்கதேவன்பட்டியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து இப்பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,