பேரழகனே..,
சொல்லிவிடேன் சொல்லிவிடேன்
துடிக்கிறது என் சிந்தை!
மலர்களோடு பேசி மந்தகாச
புன்னகை பூக்கிறாய்!
உனது மனதின் பாதையை
ஒரு முறை கேட்டுப் பாரேன்
கரடு முரடாகக் கிடந்ததை
நான் நடந்து நடந்து
செப்பனிட்டதை அறிவாய்!
மெளனிக்காதே
மரித்துப் போவேன் நான்
ஒரு முறை உன் நேச
வார்த்தையை உயிர்ப்பித்து விடேன்
நீ தான் நான் என
அது போதும்
என் வாழ்நாள் முழுவதும் நின் நியாபகங்களில் திளைத்து
சங்கமித்து இருப்பேனடா
என் பேரழகா
கவிஞர் மேகலைமணியன்