• Wed. Feb 12th, 2025

பேரழகா..,

இந்த நடுநிசி இரவினில்

இந்த நிலவில்
நீயும் நானும்

முத்தமிட்டுக் கொள்வோம்
பேரழகா….

எச்சில் முத்தத்தால்
காதல் எனும் உணவு
சமைத்து உண்போம்
நாமிருவரும்!

முத்தத்தின் ஈரம்
கார்காலத்தின் முதல் மழையாகும்
என் பேரழகா…

கவிஞர் மேகலைமணியன்