பொடியாக நறுக்கிய வெங்காயம்-1கப்,
பொடியாக நறுக்கிய தக்காளி-1கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய்-1
துருவிய பனீர்-கப்,
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்,
10 முந்திரி பருப்பு அரைத்த கலவை,
தேவையான அளவு உப்பு,
மஞ்சள் தூள்- 1/2ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து 3ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அதனுடன் வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின் மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்புசேர்த்து கிளறிய பின் பனீர், அரைத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பையும் சேர்த்து தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து நன்கு வாசனை வந்ததும் இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லில் மாவை ஊற்றி மூடி வைக்கவும். (அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்) மூடியை எடுத்து விட்டு தோசையின் நடுவே கிரேவியை வைத்து முக்கோண வடிவில் மடித்து திசையை சுற்றிலும் நெய் விட்டு எடுத்து சாப்பிடவும். அருமையான மசால் தோசை ரெடி.
மசால் தோசை கிரேவி:
