• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விஜய் வந்தது மகிழ்ச்சி-நடிகர் சிவகுமார்..,

BySeenu

May 28, 2026

கோவையில் உள்ள தனியார் மருத்துவனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,என்னுடைய ஆரோக்கியத்திற்கு 1958 ஆண்டிலிருந்து காபி, டீ சாப்பிட்டு 68 ஆண்டுகள் ஆகின்றது.சத்தியராஜ் இன்னும் காருலகட்டை சுற்றிக் கொண்டு இருக்கிறார். இவர் எம்ஜிஆர் ஆளு, என்னைவிட 13 ஆண்டுகள் சிறியவர். அப்போது காபி மட்டுமில்லை தண்ணி சாப்பிடுவார்.வீட்டில் எல்லாரும் செல்போன் கையில் வைத்து தனியாக உட்கார்ந்து இருக்கோம். செல்போனை தூக்கிப்போட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும்.
தனியாக இருக்க கூடாது. நெருங்கிய நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள். மனதுவிட்டு நண்பரிடம் பேசவேண்டும்.

எனக்கு இப்போது 85 வயது 20 நண்பர்களிடம் தினமும் 1.30 மணி நேரம் பேசுவேன்.
உடலை சரியாக வைத்தால் மருத்துவர்கள் தேவையில்லை. நடப்பது தான் ரொம்ப முக்கியம். இரண்டாவது இதயம் கால் தான்.உடலை அனைவரும் சூர்யா மாதிரி பண்ண முடியாது, செலவு அதிகம், வாக்கிங் போனால் உடல் வலிமையாக இருக்கு.ஒரு வயதுக்கு மேல் மாமிசம் சாப்பிடக்கூடாது. இறைச்சி உணவுகளை 40 வயதுக்கு மேல் சாப்பிடக்கூடாது. சூர்யா, கார்த்தியிடம் சொல்லி இருக்கேன்.
டோபு என்றால் எனக்கு தெரியவில்லை. விஜய் வந்தது மகிழ்ச்சி. மாற்றம் வேண்டும் என்பது தான் மக்கள் வாக்கு அளித்து உள்ளார்கள்.

காமராஜர் மாதிரி எளிமையான தலைவர்கள் யாராவது பார்க்க முடிந்ததா?? திமுக , அதிமுக வேண்டாம் என சொல்லி தான் மக்கள் வாக்கு அளித்து உள்ளார்கள்.
காசு வாங்காமல் வாக்கு அளித்து உள்ளார்கள். இளைய தலைமுறை வாக்கு அளித்து உள்ளது.மக்களுக்கு நெருங்கியவர்கள் சினிமாக்காரர்கள். மக்களுக்கு அறியாமை இருந்தால் சினிமா, அரசியல்காரன் பிழைத்து கொள்வான்.தொடர்ந்து நடிகர் சத்தியராஜ் அளித்த பேட்டியில் . என்னுடைய உடல் ஆரோக்கியத்திற்கு காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி முடித்துவிட்டு காபி குடிப்பேன். நேரம் கிடைக்கும் போது நடைபயிற்சி செய்வேன்.கவுண்டம்மணி அண்ணன் சொல்லுவது போன்று கடன்காரன் துரத்தும் அளவிற்கு நடக்க வேண்டும்.

மனதை மகிழ்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.அமெரிக்காகாரர்கள் யாரும் வேலை செய்யவில்லை. இந்தியர்களை தான் வெளிநாடுகளில் தேடுகிறார்கள்.உடல் ஆரோக்கியத்திற்கு மன வலிமை, உடல் வலிமை இரண்டு கண்களாக பார்க்க வேண்டும்.போதை பழக்கங்களில் இருந்து இளைஞர்களே பார்த்து திருந்திக் கொள்ள வேண்டும். விஜயின் அரசு டாஸ்மாக் கடைகளை முடியது நல்ல விஷயம். பாராட்ட கூடியது என தெரிவித்தார்.