• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

பலாக்காய் பிரியாணி

Byவிஷா

Feb 27, 2025

பலாக்காய் சீசனில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. இதில் அதிக அளவு விட்டமின்களும், புரோட்டின்களும் அடங்கியிருக்கிறது. பலாக்காயை வைத்து கூட்டு, பொரியல் என்று செய்வதைப் போல பிரியாணியும் செய்யலாம் என்கின்றனர் சமையல் வல்லுநர்கள். வாருங்கள் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
பலாக்காய் நறுக்கியது – ஒரு கப் பாஸ்மதி அரிசி – ஒரு கப் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் நெய் – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 3 இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன் கிராம்பு – 2 ஏலக்காய் – 2 பட்டை – ஒரு துண்டு பிரியாணி இலை – 1 வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று கரம் மசாலா – 2 டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தயிர் – 3 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை – அரைப்பழம் புதினா – ஒரு கைப்பிடி அளவு மஞ்சள் தூள் – அரை ஸ்பூன் –

செய்முறை:
முதலில் பலாக்காயை நறுக்க வேண்டும். அதற்கு முன்பாக கைகளிலும் கத்தியிலும் எண்ணெயை தடவிக்கொண்டு நறுக்க வேண்டும். அப்பொழுதுதான் அதில் இருக்கக் கூடிய பாலால் நமக்கு எந்தவித அரிப்பும் ஏற்படாது. பலாக்காயை நறுக்கி அதன் தோலை நீக்கிவிட்டு கறி அளவிற்கு நறுக்கி மஞ்சள் தூள் போட்ட தண்ணீரில் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைத்து குக்கர் சூடானதும் அதில் எண்ணெய், நெய் இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் நன்றாக காய்ந்ததும் இதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை போன்றவற்றை சேர்க்க வேண்டும். பிறகு நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பச்சை வாடை நீங்கும் பொழுது நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறம் ஆன பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதில் சேர்த்து தக்காளி நன்றாக குலையும் வரை வேக விட வேண்டும். பிறகு இதில் கரம் மசாலா, பிரியாணி மசாலா இவற்றை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மசாலாவின் வாடை போன பிறகு நறுக்கி வைத்திருக்கும் பலாக்காயை சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும். பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியையும் இதனுடன் போட்டு ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசிக்கு இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு பிரியாணிக்கு தேவையான அளவு உப்பை சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் மற்றும் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு புதினா இலைகள் ஒரு கைப்பிடி அளவு சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது குக்கரை மூடி மிதமான தீயில் இரண்டு விசில் வந்ததும் அடுப்பிலிருந்து குக்கரை இறக்கி விடலாம். குக்கர் விசில் முற்றிலும் போன பிறகு குக்கர் மூடியை திறந்து ஒரு முறை கலந்து விட்டால் சுவையான பலாக்காய் பிரியாணி தயாராகி இருக்கும்.

முக்கனிகளில் ஒன்றாக திகழக்கூடிய பலாப்பழத்தை உண்பதற்கு முன்பாகவே பலாக்காயை வைத்து இப்படி ஒரு முறை பிரியாணி செய்து பாருங்கள். பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். இந்த பலாக்காய் பிரியாணியை ஒரு முறை ட்ரை செய்து பார்க்கலாமே!

Related Post

சுவையான வெங்காய பிரியாணி:
கேழ்வரகு இனிப்பு அடை
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?