

செய்யத் தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு 1 கப்
நாட்டுச்சர்க்கரை அரைகப்
ஏலக்காய் பொடி சிறிதளவு
சுக்குப்பொடி சிறிதளவு
எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவு

செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நாட்டுச்சர்க்கரையைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பாகு பதம் தேவையில்லை. பின்னர் அதை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவில், இந்தச் சர்க்கரைக் கரைசல், ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதை சப்பாத்தி போல் தேய்த்து, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்ததைப் போட்டு சுற்றிலும் வேக வைத்து எடுத்தால் கேழ்வரகு இனிப்பு அடை தயார். தேவைப்பட்டால் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

