• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை..,

ByS.Ariyanayagam

May 28, 2026

திண்டுக்கல் பள்ளிவாசல்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
இறைத் தூதா் இப்ராஹிமின் இறை உணா்வையும், தியாகத்தையும் நினைவுகூரும் திருநாளாக, இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனா்.

இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். இதே போல நாகல் நகர், வேல்வார்கோட்டை , மா.மு .கோவிலூர், ராஜக்காபட்டி,
சந்து கடை, செல்லாண்டியம்மன் கோயில், ஆர்.வி.நகர், ரவுண்ட் ரோடு புதூர் ,ஆர் .எம். காலனி உட்பட பல இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. சிறப்பு தொழுகை முடித்து வந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டனர். பின்பு ஏழைகளுக்கு குருபானி அளித்தனர்.