• Sat. Jun 3rd, 2023

தேவையான பொருட்கள்:
கருப்பு(அ) வெள்ளை,உளுத்தம்பருப்பு-1கப்,
வறுத்த வேர்க்கடலை-1கப்(தோல் நீக்கியது)
பச்சரிசி-1கப்,
பொடித்தவெல்லம் (அ) கருப்பட்டி-1கப்
பொடித்த ஏலக்காய்-5 நெய்-1ஃ4லி
செய்முறை:
உளுத்தம்பருப்பை வாணலியில் சிறிது நெய் விட்டு நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும், அடுத்து பச்சரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு பொரித்து வரும் வரை வறுக்கவும், வறுத்த உளுந்து, அரிசியை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும், வேர்க்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து மாவுடன் சேர்த்து வெல்லத்தை பாகு காய்ச்சி ஊற்றி, உடன் நெய் சூடேற்றி ஏலக்காய், முந்திரி பருப்பு சேர்த்து சூட்டுடன் கையில் நெயை தடவி கொண்டு உருண்டைகளாக பிடிக்கவும். இடுப்பு வலி மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு அருமையான மருந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *