• Tue. Mar 21st, 2023

மதுரையில் மும்பை துணை நடிகை – பரபரப்பு

ByKalamegam Viswanathan

Feb 27, 2023

மதுரை, பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் நேரு நகர் பிரதான சாலையில் இளம் ஜோடி சொகுசுகாரின் உள்ளே சண்டை போட்டதுடன் நடு ரோட்டில் இறங்கியும் சண்டை போட்டுக் கொண்டதால் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சார்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா மகள் அங்கீதா பட்டாச்சாரியா துணை நடிகையான இவர் தனது ஆண் நண்பரான பீகார் மாநிலம் ராம்நகர் வெஸ்ட் பகுதியை சேர்ந்த மனோஜ் பாண்டே மகன் நிதிஷ்குமார் என்பவருடன் மும்பையில் இருந்து இருவரும் மகா சிவராத்திரி திருவிழாவிற்காக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோவையில் வாடகை கார் எடுத்து இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்க்க திட்டமிட்டுருந்தனர். நேற்று மதுரையில் விடுதி ஒன்றில் தங்கிய அவர்கள் இருவரும் இன்று மாலை ராமேஸ்வரம் செல்ல தயாரான நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகியதாகவும் சங்கீதா துணை நடிகை பல்வேறு படங்களில் நடித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்க திட்டமிட்டு இருந்த நிலையில் தன்னை தனது நண்பர் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்றும் அதோடு தனது பணத்தையும் ஆண் நண்பர் நிதிஷ்குமார் எடுத்து கொண்டதாகவும் இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறினர். ஒருவருக்கொருவர் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.இருவரையும் விசாரணை செய்த காவல் நிலைய ஆய்வாளர் பூமிநாதன் இருவரிடமும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *