• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி.மு.க.,சார்பாகக முன்னாள் முதல்வர் கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு பேரூர் செயலாளர் பேரூராட்சி தலை வர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வியாபாரிகள் பொதுமக்கள் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் பால.ராஜேந்திரன், அவைத்தலைவர் திரவியம் ,பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் வரவேற்றார். இந்த விழாவில் கழக நிர்வாகிகள் கஜேந்திரன்,முன்னாள் கவுன்சிலர் சேகர், முருகன்,மருது பாண்டியன், பேரூர் துணைச் செயலாளர் கண்ணன், கணேசன்,ஜெயராஜ்,மகேஸ்வரன், ராஜசேகர், செல்வம் உள்பட கலர் கலந்து கொண்டனர்.முடிவில் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் வினோத் நன்றி கூறினார்.