
சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள எழும்பூர் – கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (மார்ச் 6), நாளை (மார்ச் 7) மதியம்
மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை கடற்கரையில் இருந்து இன்று மற்றும் நாளை மதியம் 12.28, 12.40, 1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களும், கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும் கடற்கரை – தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இதே தேதிகளில் காலை 10.40, 11, 11.30, மதியம் 12 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரயில்களும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரயிலும் தாம்பரம் – கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.15, 1.15, 1.30, 2 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவைகளும், தாம்பரத்தில் மின்சார ரயில் சேவைகளும், தாம்பரத்தில் இருந்து மதியம் 12.05, 12.35, 1 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரயில் சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
