மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளி மற்றும் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர்.,

இந்நிலையில் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் மற்றும் உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.,
இந்த ஆய்வில் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.,

அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது எனவும் கழிப்பறைகளில் போதுமான வசதி உள்ளதா எனவும் தூய்மையாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.,
தினமும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தினமும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்தும் செவிலியர்களிடம் கேட்டறிந்தனர்.,
தொடர்ந்து இந்த ஆய்வில் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடம் மருத்துவமனையில் குறை ஏதும் உள்ளதா மருத்துவர்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறார்களா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் அதை மாற்றிக் கொள்ள முடியும் என எம்எல்ஏ விஜய் வேண்டுகோள் விடுத்தார்.



