• Tue. Sep 17th, 2024

மதுரை மல்லிகையின் விலை ரூ.1,200ஆக அதிரடி உயர்வு

Madurai Jasmine price rises to Rs. 1,200

மதுரை மல்லிகை விலை நேற்றுவரை கிலோ ரூபாய் 500க்கு விற்ற நிலையில் கூடுதலாக ரூபாய் 700 உயர்ந்து, என்று ரூபாய் 1,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாள் என்பதால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் கருத்து.

White Madurai Malli Flower, Rs 1/piece Thiva Exim | ID: 10370608397

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ளது மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி அருகிலுள்ள திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைவிக்கப்படும் அனைத்து வகையான மலர்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

மதுரையின் தனிச்சிறப்பு வாய்ந்த மல்லிகை, மதுரையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 50 டன் மதுரை மல்லிகை விற்பனை செய்யப்படுகிறது.

Fresh Flowers - Madurai Malli Exporter from Madurai

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மல்லிகை விலை ரூ.300லிருந்து ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளை முகூர்த்த தினம் என்பதால், கூடுதலாக ரூ.700 உயர்ந்து இன்று ரூ.1,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிச்சிப்பூ ரூ.600, முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.150, செண்டு மல்லி ரூ.80 என பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது என மதுரை மாட்டுத்தாவணி சில்லரை வியாபாரிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முகூர்த்த நாட்கள் என்பதால் இந்த விலை இருப்பதாகவும், மலர்களின் வரத்து மிக குறைவாக உள்ளதாலும் இவ் விலை ஏற்றம் அடுத்த சில நாட்கள் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Flower prices high at Mattuthavani market - The Hindu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *