• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

உமேஷ் தலைமையில் 7 நாட்கள் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அளவிடும் பணி..,

ByKalamegam Viswanathan

Jun 3, 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.

இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் மலையை சுற்றியுள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற வேண்டும் மலையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் , ஸ்ரீமதி முன்னிலையில் கடந்த மாதம் விசாரணை நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் முழு ஆய்வு நடத்திய அதன் அறிக்கையை மே மாதம் இறுதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து கடந்த 21 ந் தேதி திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ்,திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி, வருவாய் துறையினர் நில அளவைபிரிவு அதிகாரிகள் திருப்பரங்குன்றம் காவல்துறை பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் தெரு , கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு மற்றும் மலையை சுற்றி அளவீடும் பணியினை தொடங்கி உள்ளனர்.

இன்று முதல் 7 நாட்களுக்கு இந்த அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது
. DGPS என்ற நவீன அளவீடு கருவி மூலம்அளவீடு செய்யும் பணிநடைபெற்று வருகிறது.திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொழில் துறையினர் நடத்திய ஆய்வு செய்யும் பணி இன்றுடன் நிறைவுபெற்றது. நீதிமன்ற உத்தரவின்படி அளவிடும் பணியை மத்திய தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட நிலையில் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.