மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் அரசு சித்திரை பொருட்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வருடந்தோறும் அரசு சித்திரை பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கொரானா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை பொருட்காட்சி நடைபெறவில்லை. இந்தாண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு பொருட்காட்சி நடைபெறுகிறது.இப்பொருட்காட்சியை செய்தி – மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். பொருட்காட்சியில் தமிழக அரசின் துறை சார்ந்த சாதனை விளக்க அரங்குகள், பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவைகள் இடம் பெற்றுள்ளது, தமிழக அரசின் 27 அரசுத்துறை அரங்குகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.