• Sat. Apr 20th, 2024

கோவில் நிலத்தில் கலெக்டர் ஆபீஸ்… தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Kovil Land

கையகப்படுத்தப்படும் கோவில் நிலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்திவுள்ளது…

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  கள்ளக்குறிச்சி
மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை விதிக்க கோரியும், அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்ளுவதாக கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது..

அப்போது,ஒப்பந்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுமான பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்த போது, சுற்றுசுழல் மற்றும் நகரமைப்பு திட்ட அனுமதி பெறவில்லை  என்றும் தற்போது அனுமதிகள் பெற்றுள்ளதால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

High Court

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், அதிகாரிகள் நிர்ணயிக்கும் இழப்பீடு தொகை கோவிலுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மனுதாரர்  ரங்கராஜன் நரசிம்மன்,ஏற்கனவே நிலத்தை மதிப்பீடு செய்த மதிப்பிட்டாளர் முறையாக மதிப்பீடு செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

இதையடுத்து கோவில் நிலத்தை கையகப்படுத்துவதாக இருந்தால், 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டபபடி உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் குத்தகைக்கு எடுப்பதாக இருந்தால் அவ்வபோதைக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் குந்தகை தொகையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு,வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

அன்றைய தினம் நிலத்தை மதிப்பீடு செய்ய 4 அல்லது 6 தகுதி பெற்ற மதிப்பீட்டாளர்களை பரிந்துரைக்க வேண்டும் என மனுதாரர் நரசிம்மனுக்கு உத்தரவிட்டுள்ளனர்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *