சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 கோடி மோசடி செய்ததாக காரைக்குடியைச் சேர்ந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக உள்ள எஸ் ஆர் தேவர்.
தெலுங்கானாவில் உள்ள காமி நேனி மருத்துவமனைக்கு ரூ.300 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி 2018 ஆண்டு 5 கோடி ரூபாய் அளவிற்கு ஆவண கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்து, ஏமாற்றியதாக கிருஷ்ணபிரசாத் (எ) லெட்சுமிநாரயணன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து தெலுங்கானாவில் இருந்து வந்த ஐந்து பேர் கொண்ட காவல் துறையினர் செயலாளர் ஆர்.எச்.தேவரை கைது செய்து தெலுங்கானா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர் . மேலும்,காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.