அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு, விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கைதை கண்டித்தும் தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனையின் பேரில் சிவகாசியில் பஸ் ஸ்டாண்டு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி நகர கழக செயலாளர் அசன்பதூரூதீன், சிவகாசி ஒன்றியக் கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், தெய்வம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், விருதுநகர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், விஸ்வநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல துணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், திருத்தங்கல் அம்மா பேரவை நகர செயலாளர் ரமணா, ஒன்றிய கவுன்சிலர்கள் சுடர்வள்ளி, ஜெகத்சிங்பிரபு, மற்றும் கட்சி நிர்வாகிகள் தனுஷ், மகளிரணி மகேஸ்வரி, காமாட்சி, திருத்தங்கல் முன்னாள் கவுன்சிலர் ரவிச்செல்வம், ஈஞ்சார் குமரேசன், மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அதிமுக சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரம்.. சிவகாசியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!
