அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று காலை சென்னையில் உள்ளஅப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று காலை அவர் வீட்டில் இருந்த…
குறள் 744:
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்பொருள் (மு.வ):காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.
பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு வாங்குவதில் தாமதம். பொதுமக்கள் அவதி!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு வாங்குவதில் சுமார் ஒரு மணி நேரம் தாமாகியதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம். அது காலை கலெக்டர்…
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு – திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் கல்விக் கொள்கை, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது உள்ளிட்டவைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் நாளை (பிப்ரவரி 18) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் நாளை மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர்…
மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு
மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடி அசைத்து துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான…
நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்தது
உணவு தேடி ஊருக்குள் புகுந்த மானை நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் இரவு இரண்டு வயதுடைய புள்ளிமான் ஒன்று உணவு தேடி ஊருக்குள் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த தெரு நாய்கள் புள்ளி…
தாறுமாறாக உயரும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.63,520
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 63, 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கத்தின் விலை இந்தியாவில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பிப்ரவரி14-ம் தேதி…
டெல்லியைத் தொடர்ந்து பீகார், ஒடிசாவில் அடுத்தடுத்த நிலநடுக்கம்
டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பீகார், ஒடிசா மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லி என்சிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில்…
பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
பி.பி.ஜி.கல்வி குழுமம் சார்பாக, பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையில் செயல்பட்டு வரும் பி.பி.ஜி.கல்வி குழுமங்கள் சார்பாக 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின்…
சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்
தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்தும் ‘பாஸ்டேக்’ புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய…




