• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தொழில் அதிபர் குவைத்ராஜா பிறந்தநாள் விழா..,

ByRadhakrishnan Thangaraj

Apr 24, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆர் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குவைத் ராஜா இவர் இராஜபாளையம் மற்றும் வெளிநாடுகளில் தொழில் செய்து வருகிறார். இராஜபாளையம் மொட்டமலை அருகே சுரண் நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர்.

அதேபோல் குவைத் ராஜா மக்கள் சமூக இயக்கம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களுக்கு அவ்வப்போது நலத்திட்ட உதவிகள் படித்து இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு போன்றவை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.
ஏப்ரல் 24 தேதியான இன்று அவருடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுரண் நர்சிங் கல்லூரி வைசேர்மன் சுரண் ராஜா . கல்லூரி நிர்வாக அதிகாரி என்டி ராஜா நர்சிங் கல்லூரி முதல்வர் பாண்டியம்மாள் ஆகியோர் ஏற்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து குவைத் ராஜா இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 1000 த்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அசைவ உணவு வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நகர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.