• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வாக்கு எண்ணிக்கை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு சுழற்சி முறையில் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Apr 24, 2026

மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது அதனை தொடர்ந்து பாதுகாப்பாக ஸ்ராங் ரூமில் வைக்கப்பட்டது.

மதுரை தெற்கு மற்றும் வடக்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வளாகம் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது சி சி டிவி கண்காணிப்பு மையத்தில் கணினி பொறியாளர் திலீபன் தலைமையில் 4 அலுவலர்கள் சுழற்சி முறையில் 12 மணி நேரத்திற்கு ஒரு முறை பணியில் ஈடுபடுகின்றனர்

சிசிடிவி கட்டுப்பாட்டு அறைக்கு தடையில்லா மின்சாரமும் வழங்கப்படுகிறது இடையில் ஏதேனும் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய 6 இராட்சச பேட்டரிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் அவசர பயன்பாட்டிற்காக ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்க 20 துணை ராணுவ படையினர் நவீன ஆயுதங்களுடன் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளிப்புறம் காவல் உதவி ஆணையர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் அலுவலர்கள் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரால் முற்றிலுமாக சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர் .

192 தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலர் மணிமாறன் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை இவிஎம் மிஷின் ,பேலட் பாக்ஸ், கண்ட்ரோல் யூனிட் எந்திரங்கள் சரிபார்க்கபட்டு பலத்த பாதுகாப்புடன் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அரசியல் கட்சி பிரமுகர்கள் ,பார்வையாளர்கள், செய்தியாளர்களுக்கு வளாக பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தீயணைப்பு மற்றும் தடுப்பு அலுவலர் வெங்கட் ரமணன், மாவட்ட உதவி அலுவலர் திருமுருகன் தலைமையில் 20 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் அதனை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.