• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நாய்கள் கடித்து குதறியதில் மான் உயிரிழந்தது

ByG. Silambarasan

Feb 17, 2025

உணவு தேடி ஊருக்குள் புகுந்த மானை நாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அடரி கிராமத்தில் இரவு இரண்டு வயதுடைய புள்ளிமான் ஒன்று உணவு தேடி ஊருக்குள் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்ததில் படுகாயம் அடைந்த மான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. காலையில் மான் தெருவில் இறந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை மீட்டு அருகில் உள்ள காப்பு காட்டில் புதைத்தனர்.