• Sun. Mar 16th, 2025

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

ByP.Kavitha Kumar

Feb 17, 2025

உடல்நலக்குறைவு காரணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று காலை சென்னையில் உள்ள
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இன்று காலை அவர் வீட்டில் இருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.