


மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியும் அதிநவீன மின்னணு வாகனத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு துண்டு பிரசாரங்கள் வழங்கியும் கையில் பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், இந்த பேரணியானது உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி சேரிங்ககிராஸ் பகுதியில் நிறைவடைந்தது.


