ராஜபாளையம் சேத்தூரில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ராஜபாளையம் அருகே சேத்தூரில் நியாய விலைக் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மக்கள் எதிர்ப்பை மீறி மற்றொரு பேரூராட்சி சார்பில் கழிவறை கட்டுவதாக கூறி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியின் 16…
இந்தியாவில் முதல் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாட்டு கடைக்கு அனுமதி
இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள கருவாடு விற்பனைக்கூடம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் ஒரு நிலையம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே…
சேலம்-கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்
பாதை வசதி இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்ப முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருக்கக்கூடிய அவலம் என்று கூறி குடும்ப அட்டை, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு…
சேலம் மாநகராட்சியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் துவக்கம்
நவீன தொழில்நுட்பத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னலை மாநகர காவல் ஆணையர் பட்டன் அழுத்தி துவக்கி வைத்தார்சேலம் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய இணைப்பு சாலைகளில் போக்குவரத்து சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா…
கஞ்சா விற்பனை: ஏட்டு சஸ்பெண்ட்
கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலும், கஞ்சா விற்பனைக்கு உடந்தையாகவும் இருந்ததாக குமுளி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு நல்லதம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி. குமுளி போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வருகிறார். இவர் கஞ்சா வியாபாரிகளுடன்…
ஏப்.23ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் உலகபுகழ்பெற்ற சித்திரை திருவிழா வரும் ஏப்.23ல் துவங்குகிறது மே.5ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.சித்திரை திருவிழா மதுரையில் ஏப்ரல் 23ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத…
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்புவீடியோ
பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில் அவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே இறுதிகட்ட போரில் விடுதலைப்…
சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுகாதார பெண் பணியாளரை சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் வீட்டு வேலைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகள் ஈடுபடுத்தப்பட்டு வந்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.கன்னியாகுமரி மாவட்ட விடுதலை…
மாநிலங்களவை ஒரு மாதம் ஒத்திவைப்பு
அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை வரும் மார்ச் 13 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் எம்.பி. ரஜனி பாட்டீல் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து…
“3 நாட்களில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்”வடக்கு மண்டல ஐ.ஜி. பேட்டி!
திருவண்ணாமலை ஏ.டி.எம்களில் கொள்ளையடித்த கும்பல் 3 நாட்களில் பிடிபடுவார்கள் என வடக்கு மண்டல ஐஜி.கண்ணன் தெரிவித்துள்ளார். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேவையான அளவுக்கு தகவல் கிடைத்துள்ளது; 9 தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றன. குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம் இயந்திரங்களில் மட்டும்தான் கொள்ளையர்கள்…