கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுகாதார பெண் பணியாளரை சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் வீட்டு வேலைகள் மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகள் ஈடுபடுத்தப்பட்டு வந்ததை கண்டித்து விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.
கன்னியாகுமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் திருமாவேந்தன் தலைமையில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன் சுகுமாரன் உட்பட பலர் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் சந்திப்பு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் ” கன்னியாகுமரி மாவட்ட ராஜாக்கமங்கலம் வட்ட சுகாதார பணியாளரான பெண் ஊழியரை கடந்த இரண்டு ஆண்டுகளாக சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனர் மீனாட்சியின் வீட்டு வேலைகளை செய்யவும் கழிவறை சுத்த செய்யவும் பயன்படுத்தி வருவதாகவும் இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் பிரீனா சுகுமார், கண்காணிப்பாளர் ஜெசுதா ஆகியோர் அந்தப் பணியாளரை நிர்பந்தித்து தொடர்ந்து அரசு பணியை மேற்கொள்ளாமல் அதிகாரியின் வீட்டு பணியை மேற்கொள்ள வலியுறுத்தி வந்ததாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தோம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சுகாதார பெண் பணியாளரை அதிகாரியின் வீட்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வலியுறுதி வந்த அதிகாரிகள் மீது வன்கொடுமை சட்டத்தினில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.