பாதை வசதி இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்ப முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருக்கக்கூடிய அவலம் என்று கூறி குடும்ப அட்டை, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து குடும்ப அட்டை, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் பாதையை ஆக்கிரமித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதுகாப்பு பணியில் இருந்து காவலர்களிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும் பொழுது சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பல வருடங்களாக 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம் நாங்கள் சென்று வர அருகே உள்ள ஒடசல் ஏரி வாய்க்கால் கரையை பாதையாக பயன்படுத்தி வந்தோம் இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் பாதையை ஆக்கிரமித்துள்ளதால் எங்களால் அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியவில்லை என்றும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்ததாக கூறினர்