


நவீன தொழில்நுட்பத்தில் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னலை மாநகர காவல் ஆணையர் பட்டன் அழுத்தி துவக்கி வைத்தார்
சேலம் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய இணைப்பு சாலைகளில் போக்குவரத்து சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா சிக்னலை தனியார் கல்வி நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பராமரித்து வருகிறது.
மேலும் மூன்று லட்ச ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி போக்குவரத்து சிக்னலை அமைத்திருந்தது. இதனை மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா பொது மக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செந்தில் பப்ளிக் ஸ்கூல் செயலாளர் தனசேகர் மாநகர காவல் துணை ஆணையர்கள் லாவண்யா, மாடசாமி மற்றும் காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


