பாலிவுட் பழம்பெரும் நடிகைக்கு தாதாசாகேப் பால்கே விருது..!
இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும் அரசாங்கத்தின் உயரிய விருது தாதாசாகேப் பால்கே விருது. இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது 1960, 1970-களில் முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வலம் வந்த பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
கழுகுமலை அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கழுகுமலை பேரூராட்சி…
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு டெங்கு காய்ச்சல்…
தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர…
பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து நீக்கம்
ஓபிஎஸ் சை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவிலிருந்து நீக்கி ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதே நேரத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை…
ஆன்லைன் சூதாட்டம்… தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு…
உச்சநீதிமன்ற நேரடி ஒளிபரப்பு தொடங்கியது
இன்று முதல் உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு துவங்கியது. நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக பொருளாதராத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிரான…
உலக நாயகனை சந்தித்த இங்கிலாந்து எம்பி…
உலக நாயகன் கமல்ஹாசனை இங்கிலாந்து எம்பி அவருடைய இல்லத்தில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து எம்பி லார்ட் வேவர்லி என்பவர் கமல்ஹாசன் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்தும் உள்நாடு வெளிநாடு பொருளாதார சிக்கல்கள்…
தவறான செய்திகள் பரப்பியதாக 10 யூடியூப் சேனல்கள் முடக்கம்…
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள்ளடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2010ன் படி அனுமதி வழங்குவதாகவும் ஏற்கனவே அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்து, அதன்படி, பல யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின்…
ஐஸ்வர்யாவுடன் ஒரு கூலான செல்பி… பார்த்திபன்
பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஐஸ்வர்யாராயுடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில்”தாயான பிறகும் தான்…
பூமியை நோக்கி வந்த சிறுகோளை திரும்பிய நாசாவின் விண்கலம்
பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில்…