• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாலிவுட் பழம்பெரும் நடிகைக்கு தாதாசாகேப் பால்கே விருது..!

Byகாயத்ரி

Sep 27, 2022

இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்புக்காக வழங்கப்படும் அரசாங்கத்தின் உயரிய விருது தாதாசாகேப் பால்கே விருது. இந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது 1960, 1970-களில் முன்னணி நடிகையாக பாலிவுட்டில் வலம் வந்த பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என திரைப்பட துறையில் முத்திரை பதித்த 79 வயதான ஆஷா பரேக்கிற்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது எனும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.