• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கழுகுமலை அரசு பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

ByM.maniraj

Sep 27, 2022

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீத்தாமகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கழுகுமலை பேரூராட்சி மன்றத் தலைவர் அருணாசுப்பிரமணியன்,‌ துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் இயற்பியல் ஆசிரியர் ராஜகோபால், பசுமைபடை பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.