• Thu. Apr 18th, 2024

பூமியை நோக்கி வந்த சிறுகோளை திரும்பிய நாசாவின் விண்கலம்

ByA.Tamilselvan

Sep 27, 2022

பூமிக்கு அருகே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான விண்கற்களும், சிறு கோள்களும் உள்ளன. இந்த கோள்களும், விண்கற்களும் பூமியின் சுற்று வட்ட பாதைக்குள் நுழையும் அபாயம் உள்ளதா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
பூமியை சிறுகோள்கள் தாக்கும் அபாயத்தை முறியடிக்கும் வகையில் நாசா புதிய திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்திற்கு டார்ட் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இரட்டை சிறுகோள் திசை திருப்பல் சோதனை என்பதாகும். இந்த நிலையில் இந்த திட்டம் மூலம் பூமியை நோக்கி வரும் டிமார்போஸ் என்னும் சிறியகோள் மீது விண்கலனை மோதவிடுவதற்கான சோதனை முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். டிமார் போஸ் விண்கலம் 525 அடி சுற்றளவு கொண்டது. இந்த சோதனை திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.44மணிக்கு சிறுகோள் மீது வினாடிக்கு 22,500 கிலோமீட்டர் வேகத்தில் சென்று நாசா விண்கலம் மோதியது. இந்த மோதலின் போது சிறுகோள் அதன் சுற்றுப் பாதையில் இருந்து திசை திரும்பியது. வெற்றிகரமாக நிகழ்த்தபட்ட இந்த சோதனையால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த அரிய நிகழ்வை செயற்கைகோளில் உள்ள கேமிரா மூலம் நாசா நேரடியாக ஒளிபரப்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *