சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே விவசாயின் தோட்டத்தில் நல்ல பாம்பு பிடிபட்டுள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட படையாட்சியூரில் மணிவேல் என்பவரது விவசாயி தோட்டத்தில் ராட்சத நல்ல பாம்பு இருப்பதாக வாழப்பாடி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விவசாயின் தோட்டத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு, அங்கு சுற்றிக்கொண்டிருந்த கண்ணாடி விரீயன் பாம்பை சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளது. உடனடியாக செயல்பட்ட முத்தையன் என்கிற சந்தன மர டென்டிங்காவலர் நல்ல பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டார். இதனையடுத்து விரைந்து வந்த நடவடிக்கையில் ஈடுபட்ட வனத்துறையினருக்கு ஊர்மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.