• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

இராஜபாளையம் அருகே பூ மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா..,

ByRadhakrishnan Thangaraj

May 26, 2026

இராஜபாளையம் அருகே சங்கரபாண்டிபுரம் கிராமத்தில் அருள்மிகு பூ மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 15–ஆம் தேதி
கொடியேறத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் கும்மி பாட்டு,இரவு அம்மன் வழிபாடு நடைபெற்றது.

11–ம் நாள் திருவிழாவான திங்கட்கிழமை இரவு முளைப்பாரி திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு முளை பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலில் வைத்து கும்மியடித்து வழிபாடு செய்தனர்.அதைத் தொடர்ந்து 12–ஆம் நாள் திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.அதை தொடர்ந்து பின்வந்த பக்தர்கள் அக்கினி சட்டி எடுத்தும், வேல் குத்தியும், பூக்குழி இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

விழா ஏற்பாடுகளை ஊர்த் தலைவர் குருசாமி தலைமையில நிர்வாகிகள் சரவண முருகன் ,இனியபாரதி, PKK பாலு செய்திருந்தனர். இந்த பூக்குழி திருவிழாவில் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஆயிரக்காணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
செய்தனர்.