சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் ஆய்வு நடத்தினார். நாளை முதல் சேலம் மாவட்டம் முழுவதும் 535 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
மேலும், இரண்டாவது டோஸ் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி இலவசமாக போடப்படுவது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனையடுத்து,பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக துப்புரவு பணியாளர்களையும் எம்.எல்.ஏ.அருள் ராமதாஸ் பாராட்டினார்.