
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா நாளை (மே23) தொடங்கி மே 29 வரை நடைபெற உள்ளது.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்தக் கோடை விழாவில், தினந்தோறும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளன. நாளை காலை 7 மணிக்கு ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்களுக்கான மலையேற்றம் நடக்கிறது. தொடர்ந்து ஏற்காடு கலையரங்கத்தில் புலியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன.
