• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் பெருந்திருவிழாவில் பிஎம் குழுமம் சார்பில் அன்னதானம்..,

ByKalamegam Viswanathan

May 26, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி 26 ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் நடைபெற்றது சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி 21 சட்டி கரும்புத் தொட்டில் குழந்தை கட்டி நேர்த்திக்கடன் செலுத்துதல் உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர்.

பால்குடம் அக்னி சட்டியை முன்னிட்டு சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் அன்னதானங்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கி வருகின்றனர். சோழவந்தான் மருத மஹால் அருகில் பிஎம் குழுமம் சார்பில் நீர் மோர் பந்தல் மற்றும் அன்னதான வழங்கப்பட்டது. எம் வி எம் குடும்பத்தலைவர் மணி முத்தையா கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினார்கள்.

இதேபோல் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள முத்துக்குமரன் நகை மாளிகை வேல் அடகு கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை அடக்கு கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் தொழிலதிபர் மருது பாண்டியன் துவக்கி வைத்தார். செயலாளர் காளீஸ்வரன் பொருளாளர் இருளப்பன் முத்துராமன்
துணைத் தலைவர் கோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.