புளிக்காததயிர்- 250மிலி,(மிக்ஸியில் நீர் விடாமல் ஒரு சுற்று சுற்றி வைத்துக் கொள்ளவும்) துவரம்பருப்பு, பச்சரிசி-தலா1 டீஸ்பூன், துருவியதேங்காய்-2ஸ்பூன், சீரகம்-1ஸ்பூன், பச்சைமிளகாய்-4, சேப்பங்கிழங்கு-1ஃ4கிலோ, (வேகவைத்து தோலுரித்து வட்டவட்மாக நறுக்கி வைத்து கொள்ளவும், வேகவைத்து தோலுரித்தால் வழவழப்பாக இருக்கும்) தாளிக்க பொடியாக நறுக்கிய-2ஸ்பூன்வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி-1, கொத்தமல்லி தழை சிறிது, தேவையான அளவு உப்பு,. துவரம்பருப்பு, பச்சரிசி 1ஃ2மணிநேரம்ஊறவைத்து, இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் ,சீரகம் அனைத்தையும் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும், வாணலியில் தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பின் நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதையும்,உப்பும் சேர்த்து பச்சை வாசம் போக வரை மிதமான தீயில் வைத்து பின் கிழங்கை சேர்த்து இறுதியில் தயிர் சேர்த்து5நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும். பின் கொத்தமல்லித் தழையைதூவவும்.
குறிப்பு:கிழங்கிற்கு பதில் பருப்பு வடை அல்லது பக்கோடா போட்டும் வைக்கலாம்.
சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
